2025 மே 17, சனிக்கிழமை

குடாக்கடலில் அனுமதியின்றி கடலட்டை பிடித்த ஜவர் கடற்படையினரால் கைது

Menaka Mookandi   / 2012 மார்ச் 27 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


யாழ். குடாக்கடலில் அனுமதிப்பத்திரமின்றி கடல் அட்டைகளைப் பிடித்த குருநகர் மீனவர்கள் ஜவர் கடற்படையினரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டு யாழ்.பிராந்திய நீரியல்வளத் திணைக்களத்திடம் ஒப்டைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாழ்.குடாக்கடலில் றோலர் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி அனுமதிப்பத்திரமின்றி கடல் அட்டைகளைப் பிடித்துள்ளனர் என்று கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

இவர்களிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இவர்கள் பிடித்த கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .