2025 மே 17, சனிக்கிழமை

வெடிக்காத வெடிபொருட்களைப் பயன்படுத்தி சட்டவிரோத செயற்பாடுகள்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 30 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் வெடிக்காத வெடிபொருட்களைப் பயன்படுத்தி சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக யாழ்.  மாவட்ட பிராந்திய மிதிவெடி பொறுப்பதிகாரி வரதராஜா முருகதாஸ் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட பிராந்திய மிதிவெடி செயற்பாட்டு அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்

யாழ்ப்பாணத்தில் மிதிவெடிகள் மற்றும் வெடிக்காத பொருட்கள் அதிகளவில் மீட்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும்; வெடிக்காத பொருட்களை கண்டெடுப்பவர்கள் அதனைப் பயன்படுத்தி டைனமற் வெடி பொருட்களை உருவாக்கி கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.

கோயிலாக்கண்டி, நாகர்கோவில், அரியாலை, கொழும்புத்துறை போன்ற பிரதேசங்களில் அதிகளவில் வெடிக்காத வெடிபொருட்களும் கண்ணிவெடிகளும் மீட்கப்பட்டுள்ளன.

இப்பிரதேசங்களைச் சேர்ந்த ஒரு சிலர் வெடிபொருட்களைப் பயன்படுத்தி பாறைகளைப் பிளத்தல் மற்றும் மீன்பிடி போன்ற செயற்பாடுகளுக்கு சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாகவும் யாழ். மாவட்ட பிராந்திய மிதிவெடி பொறுப்பதிகாரி வரதராஜா முருகதாஸ் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .