2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அனலதீவில் கடல் அட்டை, சங்கு பிடித்த மீனவர்களுக்கு அபராதம்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 24 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். அனலதீவு கடற்பரப்பில் அனுமதியின்றி கடல் அட்டை மற்றும் சங்கு பிடித்த மீனவர்கள் இருவரை ஊர்காவற்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று செவ்வாய்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பிரகாரம் இருவருக்கும் தலா 3,500 ரூபா வீதம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார் ஊர்காவற்துறை நீதிவான் ஆர்.வி. மகேந்திரராஜா.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .