2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்

Kogilavani   / 2012 ஏப்ரல் 25 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
யாழ்.சிறைச்சாலையில் இரு கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோடியுள்ளதாக யாழ். சிறைச்சாலை பிரதம அதிகாரி எஸ்.இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் இடம்பெற்ற கைகலப்பில் குறித்த கைதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் 24 ஆம் இலக்க வாட்டில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் மேற்படி கைதி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஒரு மணியளவில் காலில் இடப்பட்ட விலங்கினை உடைத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.

மேற்படி கைதியை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் துரிதப்படுத்தியுள்ளதாக யாழ். சிறைச்சாலை பிரதம அதிகாரி எஸ்.இந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோடிய 4ஆவது சம்பவம் இதுவாகும். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .