2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பளையில் வெடிபொருள் வெடித்து இரு சிறுவர்கள் பலி

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 26 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

             (ஹேமந்த்,கவிசுகி)

பளை - முல்லையடிப் பகுதியில்  நேற்று புதன்கிழமை மாலை மோட்டார் வெடிபொருள் வெடித்ததில்  சிறுவர்கள் இருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.

முகுந்தன் தமிழ்மாறன் (வயது 4), முகுந்தன் தனோஜன் (வயது 7) ஆகிய சகோதரர்களே இவ்வாறு  பலியானவர்களாவர்.

தங்களது வீட்டு வளாகத்தினுள்ள காணப்பட்ட இம்மோட்டார் வெடிபொருளை வீட்டிற்குள் எடுத்துவந்த  இச்சிறுவர்கள் இருவரும் அதை நிலத்தில் அடித்து விளையாடியபோது அது  வெடித்ததாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் இச்சிறுவர்களின் பெற்றோர் வெளியில் சென்றிருந்ததாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ராஜபக்ஷ - தமிழ்மிரருக்குத் தெரிவிக்கையில்...

“இனந்தெரியாத இருப்புப் பொருளொன்றை சிறுவர்கள் எடுத்து விளையாட முனைந்தபோதே இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதியில் அடிக்கடி நடைபெறுவதால் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு விளிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வித்தியாசமான ஏதாவது பொருட்களைக் கண்டால் உடனடியாக பாதுகாப்பு தரப்பினரிடம் தெரிவிக்க வேண்டும். அதைவிடுத்து அப்பொருட்களில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளக் கூடாது. பெற்றோர்களின் கவனயீனத்தினால் இரண்டு சிறுவர்கள் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். எனவே தயவுசெய்து பெற்றோர்களை விளிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்” என்று குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .