2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நெல்லியடி இளைஞர் கொலைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 26 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். நெல்லியடி வதிரிச் சந்தியில் கடந்த செவ்வாய்க்கிழமை இளைஞனொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்  தொடர்பில் அவரது உறவினரொருவர் சந்தேகத்தின் பேரில் நெல்லியடிப் பொலிஸாரினால்  நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குறித்த இளைஞருக்கும் கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த உறவினருக்கும் இடையில் கடந்த திங்கட்கிழமை கையடக்கத் தொலைபேசி மூலம் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் பொலிஸாருக்குத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து குறித்த உறவினர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
 
இதேவேளை, கொல்லப்பட்ட இளைஞரின் தலையில் 3 கடும் காயங்களுக்குள்ளான நிலையில் அதிக  இரத்தக்கசிவு ஏற்பட்டு மரணமடைந்ததாக பிரேத பரிசோதனை  நடத்திய வல்வெட்டித்துறை மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் கே.மயிலேறும்பெருமாள் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினரொருவருக்கு  மதியவேளை  உணவு கொடுத்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கையிலேயே குறித்த இளைஞர் நெல்லியடி வதிரிச் சந்தியில் இனந்தெரியாத இருவரின் வாள்வெட்டுக்கு இலக்காகி பலியானார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .