2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வீதி அகலிப்பு பணிகளையொட்டி மின்விநியோகம் தடைப்படும்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 27 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில்  வீதி அகலிப்பு பணிகளையொட்டி மின்விநியோக மார்க்கங்களை இடமாற்ற வேண்டியுள்ளதாலும் கட்டமைப்பு வேலைகள் செய்ய வேண்டியுள்ளதாலும் சில பகுதிகளில்  மின்விநியோகம் தடைப்படுமென யாழ். பிராந்திய மின்சாரசபை அறிவித்துள்ளது.

கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, முடமாவடிப்பகுதி, பாற்பண்ணைப்பகுதி, திருநெல்வேலி நகரம், மருத்துவபீடப் பிரதேசம், ஆடியபாதம் வீதியிலிருந்து கொக்குவில்ச்; சந்தி வரையான பகுதி, கல்வியங்காடு, நல்லூர், அரியாலை, தென்மராட்சி ஆகிய பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை, வியாழக்கிழமைகளில்  காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை மின்விநியோகம் தடைப்படும். 

சுன்னாகம், குப்பிளான், மயிலங்காடு, ஏழாலை, காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயப்பகுதி, மல்லாகம், தெல்லிப்பளை, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான், கோண்டாவில் பிரதேசத்தின் மேற்குப் பகுதி, குளப்பிட்டிப் பிரதேசம், கொக்குவில் பிரதேசத்தின் ஒருபகுதி, நாச்சிமார் கோவிலடி, கந்தரோடை, மாகியப்பிட்டி, பண்டத்தரிப்பு, இளவாலை, சங்கானை, மாதகல், வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய், காரைநகர் பிரதேசம், தீவகப் பிரதேசம், அராலி, புன்னாலைக்கட்டுவன், அச்சசெழு, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சிப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் எதிர்வரும் புதன்கிழமை,   வெள்ளிக்கிழமைகளில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை மின்விநியோகம் தடைப்படுமெனவும் யாழ். பிராந்திய மின்சாரசபை அறிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .