2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

யாழில் ஐ.தே.க. செயற்குழு உறுப்பினர் பாலசந்திரன் மீது தாக்குதல்: இருவர் கைது;

Kogilavani   / 2012 ஏப்ரல் 28 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                         (கவிசுகி)

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். காரைநகர் பிரதேசசபை உறுப்பினரும், ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினருமான கணேசபிள்ளை பாலசந்திரன் மீது நேற்று வியாழக்கிழமை இரவு தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
 
அரசியல் சம்பந்தப்பட்ட விடயங்களை வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாலச்சந்திரன் ஊர்காவற்துறை பொலிஸில் முறைபாடு செய்துள்ளதாகவும், இவரைத் தாக்கியவர்கள் அரசியல் கட்சி ஒன்றை சேர்ந்தவர்கள் என அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்
 
அத்தோடு இவரின் முறைப்பாட்டைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இருவர் சந்தேகத்தில் ஊர்காவற்துறை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .