2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் அச்சு ஊடகங்களின் ஆசிரியர்கள், மூத்த ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2012 மே 03 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)
 
சர்வதேச சுதந்திர ஊடக தினத்தையொட்டி இலங்கையிலிருந்து வெளியாகும் தமிழ் அச்சு ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் மூத்த ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் சுதந்திர ஊடகக்குரல் அமைப்பின் ஏற்பாட்டில் ஊடகக்குரல் அமைப்பின் தலைவர் இரா.புத்திரசிகாமணி தலைமையில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.

கடந்தகாலங்களில் இடம்பெற்ற வன்செயல்களின்போது மரணித்த ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து தீபச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ் அச்சு ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் மூத்த ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மூத்த ஊடகவியலாளர்களான உதயன் ஆசிரியர் கானமயில்நாதன், கோபால கிருஷ்ணன், வித்தியாதரன் ஆகியோரை ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் பொன்னாடை போர்த்தி கௌரவித்து நினைவுப் பரிசில்களையும் வழங்கினர்.

தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரை வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் என்.கீதாஞ்சலி பொன்னாடை போர்த்தி  கௌரவித்து நினைவுப் பரிசிலையும் வழங்கினார்.  வீரகேசரி ஆசிரியர் பிரபாகரனை யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா பொன்னாடை போர்த்தி கௌரவித்து  நினைவுப் பரிசிலையும் வழங்கினார்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .