Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2012 மே 04 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நகரிலுள்ள இராணுவ பாதுகாப்புச் சோதனைச் சாவடியொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு இராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர்.
இந்த இரு இராணுவ வீரர்களும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு இராணுவ வீரர் மீது மற்றுமொரு இராணுவ வீரர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட இராணுவ வீரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினையே இதற்கான காரணமென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஆர்.வணிகசூரிய --தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
சுமித், எதிரிசிங்க என்ற இராணுவ வீரர்களே துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் ஆவர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் இராணுவத்தினரும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .