2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'யாழ்.பொலிஸ் நிலையத்தில் தமிழில் முறைப்பாடுகள் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது'

Kogilavani   / 2012 மே 05 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)

யாழ்.பொலிஸ் நிலையத்தில் தமிழில் முறைப்பாடுகள் செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் தயங்காமல் தங்கள் முறைப்பாடுகளை தமிழில் பதிவு செய்யலாம் என்று யாழ்.பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரகரா தெரிவித்தார்.

யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

யாழ்.குடாநாட்டில் குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

யாழில் அதிகரிக்கும் குற்றச் செயல்களினால் மக்கள் மிகவும் துன்பப்படுகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அண்மையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குழுவை கைது செய்துள்ளோம். விரைவில் யாழில் போதைப் பொருட்களை முற்றாக ஒழிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

மக்களின் சொத்துக்கைளைக் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக நாங்கள் கண்விழித்து இருக்கின்றோம். யாழில் எந்த இடத்தில் கொள்ளைச் சம்பவம் நடந்தாலும் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவலைக் கொடுங்கள் என்றார்.

இந்த சந்திப்பில் வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா, யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குகநேசன், யாழ்.பொலிஸ் நிலையத் தலமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .