2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வெசாக் தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு

Kogilavani   / 2012 மே 05 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


வெசாக் பண்டிகையை முன்னிட்டு யாழ்.சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இன்று சனிக்கிழமை காலை இரத்ததான நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தனர்.

இதில் யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கி வைத்திய அதிகாரிகளினால் யாழ்.சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பலரிடம் இருந்து இரத்ததானம் பெறப்பட்டது.

இந் நிகழ்வில் நாகவிகாரை பீட அதிகாரி பலாத்கொட அபேதிஸ்ஸ,  யாழ்.சிறைச்சாலை அத்தியட்சகர் செனரத் பண்டாரா, நீதிவான் கே.எஸ்.மகேந்திரராஜா, யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா, யாழ்.சிறைச்சாலை பிரதம ஜெயிலர் இந்திரக்குமார், யாழ்.சிறைசாலை நலன்புரி உத்தியோகத்தர் சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .