2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'யாழில் காசநோயின் தாக்கம் அதிகரிப்பு'

Menaka Mookandi   / 2012 மே 07 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் காசநோயின் தாக்கம் வெகுவாக அதிகரித்துச் செல்வதாகவும் தடுப்பு முகாம்களில் இருந்து வெளியேறியவர்களே இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி யமுனாந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இந்த வருடம் மே மாதம் வரையான நான்கு மாதங்களில் 5000 பேர் காச நோய்க்கான சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். அத்துடன், யாழ்.சிறைச்சாலையில் மூன்று கைதிகளுக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் யாழ்.சிறைச்சாலைக்கு சென்று காசநோய் பரிசோதனை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தடுப்பு முகாம்களில் இருந்து விடுதலையானவர்களுக்கு அதிகளவில் காசநோய் தொற்று இருப்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு விசேடமான சிகிச்சை முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்

யுத்தம் முடிந்த பின்னர் யாழ்பாணத்தில் காசநோயின் தாக்கம் அதிகரித்து செல்வதாகவும் இருந்தும் அது தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.

மயிலிட்டியில் உள்ள காசநோய் வைத்தியசாலை திறக்கப்பட வேண்டும் கடந்த 1990ஆம் ஆண்டு யுத்த நடவடிக்கையின் போது மூடப்பட்ட காசநோய் வைத்தியசாலை திறக்கப்படுவதன் மூலம் யாழில் காசநோயை முற்றாக இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .