2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் அநேகமான உணவகங்கள் ஏ தரத்தில்

Suganthini Ratnam   / 2012 மே 09 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)

யாழ். மாவட்டத்திலுள்ள அநேகமான உணவகங்கள்  உணவு கையாளும் நிலையங்களுக்கான தரச் சான்றிதழிலில் ஏ தரத்தில் உள்ளதாக யாழ். பிராந்திய உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்  பொ.சிவரூபன் தெரிவித்தார்.

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

உணவுச் சட்டத்தின் கீழ் யாழ்;ப்பாணத்தில்; இந்த வருடத்தின் முதல் காலாண்டுவரை 350 உணவு நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 130 உணவு நிறுவனங்கள்   3,68,800 ரூபாவை அபராதமாக செலுத்தியுள்ளதாகவும் பொ.சிவரூபன்  குறிப்பிட்டார்

மக்கள் தரமான, சுகாதாரமான உணவுகளை உட்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டுவந்துள்ளன.  உணவு கையாளும் நிலையங்களின் சுகாதாரம் பேணப்படாமை தொடர்பில் ஏதாவது முறைகேடுகள் ஏற்படின்  யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் மக்கள் நேரில் முறையிடலாம். இவ்வாறான உணவு நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் தயாராகவுள்ளதாகவும் யாழ். பிராந்திய உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .