2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

லலித், குகன் வழக்கு விசாரணைக்காக இராணுவத் தளபதிக்கு அழைப்பாணை

Super User   / 2012 மே 09 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                   (கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் காணாமல் போன லலித், குகன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, பொலிஸ்மா அதிபர் இலங்கக்கோன், யாழ். அச்சுவேலி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் முறைப்பாட்டாளரான முருகானந்தா ஜெனதா ஆகியோருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றத்தால் இன்று அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

யாழ். நீதிவான் மா.கணேசராசாவினால் இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை இம்மாதம்  23ஆம் திகதி  நடைபெறவுள்ளது. அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு மேற்படி அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளளது.

இந்த வழக்கு விசாரணைகள் தொடர்பான முற்னேற்ற அறிக்கைகள் கொழும்பு மேல் முறையிட்டு நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .