2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிறைக்குள் கையடக்க தொலைபேசி வைத்திருந்த கைதிகள் இருவருக்கு தண்டனை

A.P.Mathan   / 2012 மே 10 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். சிறைச்சாலைக்குள் கையடக்க தொலைபேசியை வைத்திருந்தமை மற்றும்  பாவித்த கைதிகள் இருவருக்கு யாழ். நீதிமன்ற நீதவான் மா.கணேராசா சிறைத்தண்டனை வழங்கி இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.

சிறைச்சாலைக்குள் தடைசெய்யப்பட்ட பொருளான கைத் தொலைபேசியை வைத்திருந்தமை தொடர்பாக யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் செனரத் பண்டாரவினால் மன்றில் இன்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த சிறைக் கைதிகள் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதற்கு இணங்க ஒருவருக்கு 6 மாத சாதாரண சிறையும் மற்றையவருக்கு 2 மாத சாதாரண சிறைத் தண்டனையும் வழங்கிகப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .