2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

அச்சுவேலியில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 மே 27 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொப்பிகல பகுதியில் வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அச்சுவேலிப் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசு அன்னமுத்தம்மா (வயது 72) என்பவரது சடலமே வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இவர் வீட்டில் தனியாக வாழ்ந்துவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இக்கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் ரத்தக்கறை படிந்த கோடாலியொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .