2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

'போருக்குப் பின்னரான அபிவிருத்தி' சர்வதேச மாநாடு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 20 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்,ஜெ.டானியல்)


யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் 'போருக்குப் பின்னரான அபிவிருத்தி' என்னும் தொனிப்பொருளில்  சர்வதேச மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

இரு தினங்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா,  இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழங்கள் மற்றும் நிறுவனம் சார்ந்த 650 இற்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் கலந்துகொள்கின்றனர். இதன்போது 300 இற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டு ஆய்வரங்கு நடைபெற்றுவருகின்றது

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்னம் தலைமையில் ஆரம்பமான இம்மாநாட்டில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, பாராம்ரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா, களனிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சரத் அமுனுகம ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X