2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு வதிவிடப் பயிற்சிக் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

வடமாகாண கல்வித் தினைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கான வதிவிடப் பயிற்சிக் கருத்தரங்கு எதிர்வரும்  20ஆம் திகதி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆரம்பமாகவுள்ளது.

தென்னிலங்கையில் இருந்து வரும் வளவாளர்களுடன்  யாழ். மாவட்ட வளவாளர்களும் கலந்துகொண்டு உடற்பயிற்சி  ஆசிரியர்களுக்கான கருத்தரங்கை நடத்தவுள்ளனர்.

தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் இந்த வதிவிட பயிற்சிக் கருத்தரங்கு வடமாகாண ஆளுநர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கு அமைய நடைபெறவுள்ளது.

வடமாகாணத்திற்கு உட்பட்ட 12 கல்வி வலயங்களில் இருந்தும் தெரிவுசெய்யப்பட்ட உடற்பயிற்சி  ஆசிரியர்கள் இந்தப் பயிற்சிக் கருத்தரங்கில் கலந்துகொள்ளவுள்ளதாக வடமாகாண மாணவர் அபிவிருத்தி மற்றும் உடற்கல்விக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே.சத்தியபாலன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலை அணிகளுக்கு இடையே  தேசிய மட்டத்தில் நடைபெறவுள்ள தடகளப் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள வடமாகாண விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கான 4 நாள் வதிவிடப் பயிற்சிநெறி எதிர்வரும் 20ஆம் திகதி முதல்   வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X