2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யுத்த காலத்தில் காணாமல்போனோர் தொடர்பில் ஆராய விசேட குழு யாழ். விஜயம்: ரி.கனகராஜ்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யுத்தம் நடைபெற்ற காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் விசேட குழுவொன்று யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இன்று காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே இதனை அவர் இதனை தெரிவித்தார்.

'யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் பெருமளவானவர்கள் காணாமல்போயுள்ளனர். அதிலும் 2006ஆம் ஆண்டில் இது தொடர்பில் அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

2006 ஆண்டில் மாத்திரம் 468 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அதில் 128பேர் மீண்டும் திரும்பி வந்துள்ளதாகவும் முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல்போன 196 பேரின் நிலமை இன்று வரை என்னவென்று தெரியாமல் உள்ளது.

இந்த 196 பேரின் நிலைபற்றி பற்றி ஆராய்வதற்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் விசேட குழு ஒன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளதாக' அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X