2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

வட, கிழக்கில் நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்த அமெரிக்கா முன்வர வேண்டும்: சிறிதரன் எம்.பி

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

வடக்கு - கிழக்கில் நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு அமெரிக்க முன்வரவேண்டும் என்று தழிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அமெரிக்க துணைத்தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று அமெரிக்க உதவித்தூதவர் தலைமையிலான குழுவினர் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்த போதே அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இந்தச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சிவஞானம் சிறிதரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், மற்றும் மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழ்மிரருக்குத் தெரிவிக்கையில்,

'தமிழ் மக்கள் இன்று பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அரசின் இராணுவத்தின் ஆதிக்கத்தின் மத்தியில் தமிழ் மக்கள் வாழவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டு காலமாக தமிழ் மக்கள் தமிழீழம் என்ற ஒன்றுக்காக போராடியிருக்கின்றார்கள். தற்போது அனைத்தையும் இழந்து தமிழ் மக்கள் ஏதிலிகளாக வாழந்து வருகின்றனர்.

தமிழ் மக்களின் இந்தப் போராட்டத்தின் அழிவுக்கு அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. இதனால் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அமெரிக்கா அக்கறையுடன் செயற்பட வேண்டும்' என்று இச்சந்திப்பின்போது வலியுறுத்தியதாக அவர் கூறினார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,

அமெரிக்க குழுவினருடனான சந்திப்பின்போது இரண்டு கோரிக்கைகளை  முன்வைத்துள்ளோம். இந்த கோரிக்கைகளை சர்வதேசம் சமூகம் ஏற்றுக்கொண்டு இதற்குரிய தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.

60 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் போராடி வருகின்றனர். 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ் மக்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு இவற்றிற்கு மேலாக தமிழ் மக்களின் வளங்கள் அழிக்கப்பட்டு வருவதோடு வளங்களும் சூறையாடப்பட்டு வருகின்றன.

அத்துடன் இராணுவத்தினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நில அபகரிப்பு காரணமாக தமிழர்களின் வாழ்விடங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றது.

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் பொருளாதார ரீதியில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான பகுதிகளில் தென்னிலங்கையில் இருந்து பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் வடபகுதிக்கு படையெடுத்துள்.

இதனால் தமிழ் மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதுடன் சர்வதேசத்தின் கண்காணிப்பு அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

அத்துடன் தற்போது இலங்கையில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலஅபரிப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவேண்டும் என்றால் தமிழ் தேசத்தை மேற்குலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0

  • கிழக்கன் Monday, 20 August 2012 04:23 PM

    ஐயா சிறிதரன் அவர்களே, வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் தவிர்க்க முடியாத ஒரு சமூகம் என்பதனை இந்த நாடும் உலகமும் அறியும். சிறு வயதிலிருந்தே யூதர்களை நேசிப்பதாகவும், முஸ்லிம்களை வெறுப்பதாகவும் சொல்லும் நீங்கள், உலகெங்கிலும் முஸ்லிம்களை சூரசம்ஹாரம் செய்வதை தனது வெளிநாட்டுக் கொள்கையாகவும், யூத நாட்டை ஊட்டி வளர்ப்பதனை தனது கடமையாகவும் கொண்டிருக்கும் அமெரிக்காவை துணைக்கழைப்பது புதுமையானது அல்ல. ஆனால் வடக்கு - கிழக்கு தீர்வு விடயத்தில் முஸ்லிம்கள் தவிர்க்க முடியாத ஒரு பிரிவு என்பதனை மறந்து கருத்து வெளியிடும் நீங்கள் வடக்கு - கிழக்கு தீர்வு பற்றி யோசிப்பது வியப்புக்குரியது.

    Reply : 0       0

    jameel oddamavadi Monday, 20 August 2012 04:31 PM

    நரியிடம் குடல் கழுவக் கொடுத்த கதைதான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X