2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருட்டில் ஈடுபட்டார்கள் என்ற சந்கேத்தில் மூவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ்ப்பாணத்தில் வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய உபபரிசோதகர் விக்கிரமாராட்சி இன்று தெரிவித்தார்.

யாழ். கொட்டடி, வண்ணார்பண்ணை சிவப்பிரகாசம் வீதி மற்றும் நல்லூரில் அரசடி வீதிகளில் உள்ள வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த திருட்டில் ஈடுபட்டார்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் இவர்களையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். பொலிஸ் நிலைய உபபரிசோதகர் குறிப்பிட்டார். 

கைதுசெய்யப்பட்ட 3 பேரும்; நாளை புதன்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும்  யாழ். பொலிஸ் நிலைய உபபரிசோதகர் விக்கிரமாராட்சி தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X