2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்தி என்கிற விடயம் சமூக அபிவிருத்தியை மையப்படுத்தியதாக அமையவேண்டும்: யாழ். அரச அதிபர்

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


அபிவிருத்தி என்கிற விடயம் சமூக அபிவிருத்தியை மையப்படுத்தியதாக அமையவேண்டும். இத்தகைய சமூக அபிவிருத்திக்கு விளையாட்டுத்துறை மிகக் கூடுதலான பங்களிப்பையும் அக்கறையினையும் செலுத்தி வருகின்றது என்று யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

வடமாகாண விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் தேசிய கால்பந்தாட்ட அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்வதற்கான பிரதேச மட்டத்தில் நடைபெறவுள்ள கால்பந்தாட்டப் போட்டிகளை நடாத்துவதற்கு பிரதேச செயலாளர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்...

பொதுவாக அபிவிருத்தி என்பது கட்டிடங்களையும் காணிகளையும் வீதிகளையும் அபிவிருத்தி செய்வதை மையமாகக் கொண்டவை. அவ்வாறான அபிவிருத்திகளை மட்டுமே அபிவிருத்தி என்கின்ற ஒருநோக்கு கடந்த காலங்களில் இருந்தாலும் கூட, உண்மையில் அபிவிருத்தி என்கிற விடயம் சமூக அபிவிருத்தியை மையப்படுத்தியதாக அமையவேண்டும். இத்தகைய சமூக அபிவிருத்திக்கு விளையாட்டுத்துறை மிகக் கூடுதலான பங்களிப்பையும் அக்கறையினையும் செலுத்தி வருகின்றது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கு பிரதேச மட்டத்திலும் மாவட்ட ரீதியாகவும் பொது விளையாட்டு மைதானம் அமைக்கவேண்டும் என்ற திட்டம் அங்கிகரிக்கப்பட்டு தற்போது அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அத்துடன் யாழ். மாவட்டத்தில் விளையாட்டத்துறையில் எத்தகைய சவால்கள் வந்தாலும் அதனை எதிகொண்டு எங்கள் திறன்களை வெளிக்காட்டக்கூடிய சந்தர்ப்பத்தை நாங்கள் அனைவரும் உருவாக்கவேண்டும். இதற்காக விளையாட்டுத்தறை உத்தியோகஸ்தர்கள் சிறந்த பங்களிப்பை வழங்கவேண்டும் என்றும் யாழ். மாவட்ட அரச அதிபர் சந்தரம் அருமை நாயகம் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கால்பந்தாட்டப்போட்டிகளை நடாத்துவதற்கு 10,000 ரூபாவிற்கான காசோலைகளும் விளையாட்டுத் உத்தியோகஸ்தர்களுக்கான உபகரணங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் வடமாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் அண்ணாத்துரை மற்றும் பிரதேச செயலாளர்கள், விளையாட்டு உத்தியோகஸ்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X