2025 மே 20, செவ்வாய்க்கிழமை

புதிய நீதவான்களுக்கான பயிற்சிவிப்பாளராக யாழ். நீதவான் மா.கணேசராஜா நியமனம்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

கொழும்பில் புதிதாக நியமனம் பெற்ற நீதவான்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனத்தை நீதிச் சேவை ஆணைக்குழு தனக்கு வழங்கியதாக அவர் கூறினார்.

மேற்படி புதிய நீதவான்களுக்கு கொழும்பிலுள்ள சிரேஸ்ட நீதிபதிகளுடன் இணைந்து 3 மாத பயிற்சிகள் வழங்கப்படவுள்ள நிலையில், இப்பயிற்சிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று அவர் கூறினார்.

இப்பயிற்சி நெறியின் பின்னர் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் தனக்கு மாவட்ட நீதிபதிக்கான நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் யாழ். நீதவான் மா.கணேசராஜா மேலும் தெரிவித்தார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X