2025 மே 20, செவ்வாய்க்கிழமை

குருநகர் கடற்றொழிலாளர்களுக்காக புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்துவைப்பு

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 22 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

குருநகர் வடகடல் நிறுவனமும் யாழ். மாவட்ட பலநோக்கு கூட்டுறவு சங்கமும் இணைந்து கடற்றொழிலாளர்களின் நலன் கருதி குருநகர் பகுதியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை இன்று புதன்கிழமை திறந்து வைத்துள்ளன.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட பொறுப்பாளர் கமலேந்திரன் மற்றும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன தலைவர். அ.எமிலியாம்பிள்ளை ஆகியோர் இன்று இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்து வைத்தனர்.

கடற்றொழிலாளர்கள் தூர இடங்களுக்குச் சென்று எரிபொருளை கொள்வனவு செய்துகொள்கின்ற காரணத்தினால் கடற்றொழிலாளர்கள் நலன் கருதி குருநகர் வடகடல் நிறுவன வளாகத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழிலாளர் கூட்டறவு சங்கங்களின் சம்மேளன தலைவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X