2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

வலிகாமம் தெற்கு பிரதேசசபை தலைமையகத்தில் சமய நிகழ்வுகள்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

உள்ளூராட்சி உட்கட்டமைப்புக்களை மேம்படுத்தும் முகமாக உள்ளூராட்சி மன்றத்தின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தலைமை அலுவலக கட்டிடத்திற்கான சமய முறைப்படியான சடங்குகள் இன்று புதன்கிழமை நடைபெற்றன.

இன்று காலை 10 மணிக்கு வலிகாமம் தெற்கு பிரதேச சபைத் தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேசபை உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தலைமை அலுவலக கட்டிடத்தில்  இன்று சமய முறைப்படியான சடங்குகள் நடைபெறவிருந்த நிலையில், இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் குறித்த கட்டிடத்தின் மீது கழிவு எண்ணெய் ஊற்றி தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X