2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'கடல் வளங்கள் குறைவடைவதால் வட மாகாண கடற்றொழிலாளர்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்''

Super User   / 2012 ஓகஸ்ட் 23 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

வட கடலில் கடல் வளங்கள் குறைவடைந்து செல்வதினால் வட மாகாண கடற்றொழிலாளர்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் சம்மேளனத் தலைவர் எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்

வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் சம்மேளனத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கடலை நம்பி வாழ்ந்த கடற்றொழிலாளர்கள் இன்று கடலில் கடல் வளங்கள் இல்லாததினால் மிகவும் கஷ்டமான நிலையில் தங்கள் வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றனர். வட கடல் வளங்கள் இந்திய கடற்றொழிலாளர்களினால் சுரண்டப்படுகின்றது. அதைத் தடுப்பதற்கு உரிய பொறிமுறை இல்லை. அத்தோடு தற்போதைய காலநிலைகளினால் மீன் இனங்கள் அருகி வருகின்றன.

வடகடலில் தற்போது வெப்பக்காலநிலை காணப்படுகின்றது. சோளகக் காற்று வீசுகின்றது. மழை இல்லை மீன் இனங்கள் இனப்பெருக்கம் செய்வதற்குரிய உயிரிழல் காலநிலை இல்லை. இதன் காரணமாக கடல் வளங்கள் குறைவடைந்து செல்கின்றது. வட மாகாணத்தில் 75 வீதமான கடற்றொழிலாளர்கள் அன்றாடம் உழைத்து உண்பவர்கள்.

கடற்றொழிலையே நம்பி தங்கள் குடும்பத்தை நடத்துபவர்கள் தற்போது அவர்கள் மிகவும் பொருளாதார நிலையில் ஏழ்மை நிலைக்கு சென்று கொண்டு இருக்கின்றது' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X