2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

வலி.தென்மேற்கு பிரதேசசபை கட்டிடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கை

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                       (எஸ்.கே.பிரசாத்)
உள்ளூராட்சி உட்கட்டமைப்புக்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வலி.தென்மேற்கு பிரதேசசபை புதிய கட்டிடத்திற்கு இரவு நேரத்தில் பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலி.தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதேச சபை உறுப்பினர்களால் மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில்,

கடந்த 22.8.2012 அன்று வலிகாமம் பிரதேச சபை புதிய கட்டிடத்தின் மீது சில தீயசக்திகளால் கழிவு எண்ணெய் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக் கட்டிடமும் விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில் குறித்த பிரதேச சபைக் கட்டிடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வலி.தெற்கு பிரதேச சபை புதிய கட்டிடத்திற்கு கழிவு எண்ணெய் வீசிய தீயசக்திகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி இவர்களுக்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மக்களின் சொத்தாகிய வலி.தென்மேற்கு பிரதேச சபையின் புதிய கட்டிடத்திற்கு இரவு வேளையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X