2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'யாழ் சிறுவர் இல்லத்தில் சிறார்களை பராமரிப்பதற்கு போதிய ஆளணி இல்லை'

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                     (ரஜனி)
யாழ். அரச சிறுவர் இல்லத்தில் சிறுவர்களை பராரிமரிப்பதற்கு போதிய ஆளணி இல்லை என அதிகாரி ஒருவர் தெரிவத்தார்.

அரச சிறுவர் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வரையான புள்ளி விபரத்தின் படி 31 சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள். அவர்களை பராமரிப்பதற்கு 7 பெண்கள் இருக்கின்றனர்.

31 சிறுவர்களை 7 பெண்கள்; பராமரிப்பதென்பது மிகவும் கடினமான விடயம். இதில் 2 தாய்மார்கள் வைத்தியசாலைகளில் சிறுவர்களை பராமரிக்க செல்லும் பட்சத்தில் மிகுதி 5 தாய்மார்களினாலும் 31 சிறுவர்களை சரியான முறையில் கவனிப்பது மிகவும் கஷ்டமானதொரு விடயம்.

தற்போது 2 சிறுவர்கள் தை;தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு சிறுவர்களையும் பராமரிப்பதற்கு 2 பெண்களும் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதனால் தற்போது சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்படும் 29 குழந்தைகளுக்கும், சரியான முறையில் நேர அடிப்டையில் உணவு, உடை என்பன வழங்க தாமதிக்கப்படுவதாக மேற்படி அதிகாரி தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக  தேசிய சிறுவர் நன்னடத்தை அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் விஸ்வரூபனிடம் வினவியபோது,

சிறுவர் இல்லத்திற்கு மேலதிகமாக ஆளணி தேவைப்படுவதாகவும் ஆளணி  தொடர்பில், ஆளணி முகாமைத்துவ திணைக்களத்தில் மற்றும் பிரதம செயலாளரிடம் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை காலமும் சரியான பதில்கள் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, 'தேசிய மட்டத்தில் ஒரு பிள்ளைக்கு ஒரு தாய் என்ற ரீதியில் ஆளணி நியமிக்கப்படுவதில்லை. 5 பிள்ளைக்கு ஒரு தாய் என்ற ரீதியில் நியமிக்கப்படுகின்றது.  நீண்டகாலமாக அரச சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்படும் சிறுவர்களுக்கான அனுமதிகள் நீதிமன்றம் வழங்க வேண்டும். நீதிமன்றம் அனுமதி வழங்க தாமதிக்கும் பட்சத்தில் சில சந்தர்ப்பங்களில் ஆளணி பற்றாக்குறை ஏற்படுகின்றதாகவும், அவ்வாறன சந்தர்ப்பங்களில் மேலதிகமாக தாய்மார்களை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், சிறுவர்களை பராமரிப்பதற்கு பயிற்றப்பட்ட தாய்மார்கள் இல்லை என்றும், சிறுவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிக்கும்போது சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் பணியாளர்களை பணிக்கு அமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறுவர் இல்லங்களில் இருக்கும் பிள்ளைகளை பராமரிப்பதற்கு நன்றாக பயிற்றப்பட்ட தாய்மார்கள் தேவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X