2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

பனை கைப்பணி பயிற்சி பெற்றவர்களுக்கு வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                      (ரஜனி)
பனை கைப்பணி பயிற்சி நெறியில் பயிற்சி பெற்றவர்களுக்கு வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பனை அபிவிருத்தி சபையின் விரிவாக்கல் முகாமையாளர் பா.கோபாலகிருஸ்ணன் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

திவிநெகும திட்டத்தின் கீழ் பனை அபிவிருத்தி சபையினால் மருதங்கேணி, கைதடி, பண்டத்தரிப்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த  63 பேர் பயிற்சிகளை பெற்றுக்கொண்டனர்.

இவர்களில் 44 பேருக்கு வங்கி கடன் வழங்குவதற்கு பனை அபிவிருத்தி சபை பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.

அத்துடன், பயிற்சி பெற்றவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவர்களுக்கான உபகரணங்கள் அடுத்த மாதம் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும்  தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X