2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யாழில் மின்விநியோக செயற்றிட்டங்கள் ஆரம்பித்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


யாழ்ப்பாணத்தில் பல்வேறு மின்விநியோகத் செயற்றிட்டங்களை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துவைத்தார்.

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை அமைச்சர் மேற்கொண்ட  நிலையிலேயே இந்த மின்விநியோக செயற்றிட்டங்களை ஆரம்பித்துவைத்தார்.

புங்குடுதீவு, வேலணை,  குறிகட்டுவன் ஆகிய பகுதிகளில் 300 மில்லியன் ரூபா செலவிலான மின்விநியோக செயற்றிட்டங்களையும் சாவகச்சேரியின் கெற்கெலி பகுதியிலும் மின்விநியோக செயற்றிட்டத்தை அமைச்சர் ஆரம்பித்துவைத்தார்.

இதேவேளை, தென்கொரிய அரசாங்கத்தினால் அன்பளிப்புச்; செய்யப்பட்ட சிறிய சூரிய மின்னகலத்தை நெடுந்தீவு மக்களுக்கு அமைச்சர் வழங்கினார்.

இதற்கான நிகழ்வில் மின்சக்தி மற்றும் எரிசக்தி  அமைச்சர் சம்பிக்க ரணவக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார், சில்வெஸ்திரி அலென்ரின், யாழ். அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X