2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயம் மழையினால் புத்தெழுச்சி

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

நாட்டில் நிலவி வந்த வறட்சி காரணமாக யாழ் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பயிர்ச் செய்கை, கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக புத்தெழுச்சி பெற்றுள்ளது.

யாழ். மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் நீர்ப்பாசன முறையினைப் பயன்படுத்தியே விவசாய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

வறட்சி காரணமாக நீர் நிலைகளின் நீரின் கொள்ளவு குறைந்திருந்தமையால் விவசாய நடவடிக்கை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

அதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்களை எதிர் நோக்கியிருந்தனர். தற்போது யாழ் மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக விவசாயத்திற்கு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X