2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

முன்னாள் நீதிபதியை தாக்கிய மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு யாழ். நீதிமன்றம் பிணை

Super User   / 2012 ஓகஸ்ட் 29 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

முன்னாள் நீதிபதி இளங்கோவனை தாக்கிய மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிணை வழங்கியுள்ளது.

கடந்த 23 ஆம் திகதி யாழ். மாவட்ட நீதிமன்றிற்கு விவாகரத்து வழக்கிற்கு வருகை தந்திருந்த குறித்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண் முன்னாள் நீதிபதி இளங்கோவனை தாக்கினார்.

இதனையடுத்து, குறித்த பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தெல்லிப்பளை மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த வழக்கு இன்று யாழ். நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சிறைச்சாலை அத்தியட்சகர் ஊடாக குறித்த பெண்ணின் மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, 40,000 ரூபா பெறுமதியான 2 ஆட் பிணையில் விடுதலை யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா. கணேசராஜா உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X