2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் 'மக்' நிறுவனம்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 03 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் 'மக்' மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் இணைந்துள்ளதாக யாழ். மாவட்ட செயலக கண்ணிவெடி அகற்றல் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

நிதிப் பற்றாக்குறை காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மனிதநேயச் செயற்பாடுகளிலிருந்து 'டெனிஸ்' மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் விலகியிருந்தது.

வளலாய், இடைக்காடு ஆகிய பகுதிகளில் முடங்கியிருந்த கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை 'மக்' நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. இதற்கான ஆரம்ப செயற்பாடுகளில் நேற்றையதினம் 'மக்' நிறுவனம் ஈடுபட்டது.  எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 'மக்' நிறுவனம்  தம்முடைய செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் யாழ். மாவட்ட செயலக கண்ணிவெடி அகற்றல் பிரிவு கூறியுள்ளது.

அத்துடன், 'டெனிஸ்' கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் இணைந்திருந்த உள்ளூர் ஊழியர்களுக்கு 'மக்' நிறுவனம் தொழில்வாய்ப்பை வழங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .