2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

யாழ் நகர அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 06 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், ரஜனி)


யாழ் நகரத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற அந்தக் கலந்துரையாடலில், யாழ் நகரத்தின் மையப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள், புல்லுக்குளம், வண்ணைக்குளம், ஆரியகுளம், கன்னாதிட்டிகுளம், தேவரிர்குளம் ஆகிய முக்கியமான இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திகள் பற்றியும் அப்;பணிகளில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளன.

நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் யாழ்.கோட்டைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் புதிய பூங்காவின் நிர்மாணப் பணிகள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டுள்ளதுடன் அந்தப் பணிகளை எதிர்வரும் நவம்பர் மாதத்துக்குள் முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இக்காணியில் தற்போது நெடுந்தூர தனியார் பேரூந்து நிலையம் உள்ளதால் இந்த பேரூந்து தரிப்பிடத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாகவும் இதற்கு நில வாடகை மற்றும் பாராமரிப்புக் கூலியாக மாதம் ஒன்றுக்கு 100,000 ரூபாவை யாழ்.மாநகரசபை தனியார் போக்குவரத்து சங்கத்திடம் இந்தக் கலந்துரையாடலின் போது கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் இதற்கான பதிலை வழங்குவதாக தனியார் போக்குவரத்துச் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் அதிகாரசபையின் தலைவர் நிமல் பெரேரா, யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ்.மாநகரசபை முதல்வர், யாழ்.நகர இராணுவ அதிகாரி, கடற்படை பொறுப்பதிகாரி, பொலிஸ் அதிகாரிகள், அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .