2025 மே 20, செவ்வாய்க்கிழமை

உயர் தொழில்நுட்ப கல்லூரி பட்டதாரிகளின் அடிப்படை மனித உரிமைமீறல் மனு மீதாக விசாரணை ஒத்திவைப்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 07 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி, எஸ்.கே.பிரசாத்)

உயர் தொழில்நுட்ப கல்லூரியின் தேசிய கணக்கியல் முகாமைத்துவ பட்டதாரிகளினால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான வழக்கு விசாரணை அடுத்த வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உயர் தொழில்நுட்ப கல்லூரி பட்டதாரிகள் 228 பேர் பட்டதாரி பயிலுனர் ஆட்சேர்ப்பின் போது யாழ். மாவட்ட பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்படாமை குறித்து கடந்த ஜூலை 31ஆம் திகதி தனித்தனியாக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

மேற்படி வழக்கினை, இன்று வெள்ளிக்கிழமை, சிரச திஸாநாயக்க மற்றும் இமாம் சத்தியகட்டி ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவினர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகள் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி, தவறுதலாக ஏனைய மாவட்டங்களுக்கு பயிலுனர் நியமனம் வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து மேற்படி வழக்கினை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்க நீதிபதிகள் குழு உத்தரவிட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X