2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பொதுமக்களின் முறைப்பாடுகள் குருநகர் பொலிஸில் சரியான முறையில் பதிவு செய்யப்படுதில்லை: மக்கள் முறைப்பா

Super User   / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ். பொலிஸ் நிலையத்திலன் கீழுள்ள குருநகர் பொலிஸ் பொதுமக்களின் முறைப்பாடுகள் சரியான முறையில் பதிவு செய்யப்படுதில்லை என்றும் யாழ் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்வதற்கு சென்றால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

யாழ். பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே மக்களால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்வதற்காக காலை 11 மணிக்கு சென்ற பெண் ஒருவரின் முறைப்பாடு மாலை 4 மணிக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவரின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொண்ட பொலிஸார் இரவு நேரங்களில் குறித்த பெண்ணுக்கு தொலைபேசி ஊடாக தொல்லை கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் யாழ். குருநகர் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு பிரச்சனைகள் தொடர்பாக முறைப்பாடு செய்வதற்காக செல்கின்ற போது கடமையில் நிற்கும் பொலிஸார் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதில்லை என்றும் பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் கலந்துகொண்ட யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா, பொதுமக்களால் தெரிவிக்கப்படும் இந்த விடயம் தொடர்பாக தான் கவனம் எடுத்து சம்மந்தப்பட்ட நபர்களுக்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக பொலிஸ் நிலையத்திலுள்ள முறைப்பாட்டு பெட்டி ஊடாகவோ அல்லது  நேரடியாக என்னிடம் தொடர்புகொண்டு முறையிடலாம் என அவர் தெரிவித்தார்.

அத்துடன் கரநகர் பகுதயில் உள்ள பொலிஸ் நிலையம் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் சீரான முறையில் இயங்கவில்லை என்றும் குறித்த பகுதியில் வீடு அல்லது காணி வழங்கினால் பொலிஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X