2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கடந்தகால அரசியல் தலைவர்களே எமது மக்களை கையேந்த வைத்தார்கள்: டக்ளஸ்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


'அழிவு யுத்தத்திற்கு வித்திட்டதுடன், எமது மக்களை கையேந்த வைத்தவர்கள் கடந்தகால அரசியல் தலைவர்களே' என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாண பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவின் கீழும் அமைக்கப்பட்ட சிவில் பாதுகாப்புக் குழுவில் அந்தந்தப் பகுதி கிராம சேவையாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும்.

மக்களது வாழ்வாதார மேம்பாட்டுக்கான உள்ளீடுகளை வழங்குவது மட்டுமன்றி அவற்றினது பயன்பாடுகள், பெறுபேறுகள் தொடர்பிலும் துறைசார்ந்தவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த கால அரசியல் தலைமைகள் விட்ட தவறுகளினாலேயே எமது மக்கள் அழிவு யுத்தத்திற்கு முகம் கொடுத்ததுடன் கையேந்தும் நிலைமைக்கும் உள்ளாகினர். அந்த நிலையை மாற்றியமைப்பதற்கு எல்லோரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்' என்றார்.

You May Also Like

  Comments - 0

  • Haniff Tuesday, 11 September 2012 06:39 AM

    என்னெ அய்யா சொல்றீங்க‌... ஒன்னுமே புரிய‌ல்ல.... விளங்கக்கூடியதா புரிந்து கொள்ளக்கூடியதா பேசுறத்த தைரியமா பேசுங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X