2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

வடமாகாண பாடசாலைகளுக்கு கணினி உபகரணங்கள் வழங்கல்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 14 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


ஜனாதிபதி செயலகத்தின் ஆங்கிலக் கற்கைநெறித் திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கான கணினி மற்றும் மல்டிமீடியா உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிமை நடைபெற்றுள்ளது.

யாழ் இந்து மகளீர் கல்லூரி மண்டபத்தில் வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.

வடமாகாணத்தில் உள்ள 12 வலயங்களிலும் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 120 பாடசாலைகள் இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வலயத்தில் இருந்தும் பத்து பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் மயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண கல்வி பண்பாட:டு அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் விக்கேஸ்வரன், வடமாகாண கல்விப் பணிப்பாளர் உதயகுமார், வடமாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் இராதகிருஸ்ணன், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X