2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

வேலனையில் மீட்கப்பட்ட சடலம் யாழ். வைத்தியசாலையில் ஒப்படைப்பு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 16 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ். வேலனைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காண்பதற்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வேலனைப் பகுதி கடற்கரையில் நேற்று சனிக்கிழமை மாலை இனந்தெரியாத சடலமொன்று கரையொதுங்கியதைக் கண்ட பொதுமக்கள் ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

ஊர்காவற்றுறை பொலிஸாருடன் தொடர்புகொள்வதன் மூலம் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X