Suganthini Ratnam / 2012 செப்டெம்பர் 17 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.கே.பிரசாத்)
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தின் ஆசிய பசுபிக், மத்திய கிழக்கு, வட அமெரிக்க பிரிவுக்கான பொறுப்பாளர் ஹன்னி மெகாலி மற்றும் சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகத் தெரிவுகளுக்கான மனித உரிமைகள் அதிகாரி ஒஸ்கார் சொலேரா ஆகியோரை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
வடமாகாண பிரதம செயலாளர் அலவலகத்தில் விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்ட இவ் அதிகாரிகள், வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற பொருளாதார அபிவிருத்திகள், கண்ணிவெடி அகற்றும்; செயற்பாடுகள், மீள்குடியேற்றம் ஆகியன தொடர்பில் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பில் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி, ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள்; மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன் பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட அரியாலை, நாவலடிப் பிரதேசத்திற்கு இவர்கள் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தனர். இங்கு மீள்குடியேறியுள்ள மக்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இவ் உயரதிகாரிகள் கலந்துரையாடியதுடன், அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்தனர்.
அத்துடன், இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தையும் இவ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025