2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்த போதும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை: புதிய அமெரிக்க தூ

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 19 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(த.சுமித்தி)


'இலங்கையின் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்திற்கு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம். அதற்கான தீர்வுகள் இன்னமும் எட்டப்படவில்லை' என்று இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே. சிசன் தெரிவித்தார்.

'யாழ். மாவட்ட மக்கள் கவலைக்கு மத்தியில் வாழ்கின்றனர். யாழ். மாவட்ட மக்களுக்கு அதிகளவிலான தேவைகள் இருக்கின்றன. அவற்றை நிறைவான விதத்தில் பெற்றுக்கொடுக்க வேண்டும். சிறிய அளவிலான உதவிகளைச் செய்வதற்கு உதவுவோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர், யாழ். ஆயர் இல்லத்தில் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, 'அரசியல் தீர்வை நோக்கி நகர அரசாங்கத்திற்கு கூடிய அழுத்தங்கள் கொடுக்குமாறும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த வலியுறுத்துமாறும் அமெரிக்க தூதரிடம் யாழ். ஆயர் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு பதிலளித்த மிச்செல் ஜே.சிசன், 'இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்திற்கு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அழுத்தங்களைக் கொடுத்து வருவதாகவும் அதற்கான தீர்வுகள் இன்னமும் எட்டப்படவில்லை' என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X