2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

வயோதிபர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 22 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


மஹிந்த சிந்தனையின் கீழ் சமூகசேவை அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான 1000 ரூபா கொடுப்பனவு மற்றும் சுயதொழில் உதவி வழங்கல் நிகழ்வு இன்று சனிக்கிழமை சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா மற்றும் சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் ஆகியோர் கலந்துகொண்டு கொடுப்பனவுகளை வழங்கினர்.

இதில் 8 பிரதேச செயலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வீட்டுவசதிகளை ஏற்படுத்துவதற்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X