2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மனித உரிமை ஆணைக்குழுவின் வடமாகாண ஆணையாளர் - சிவில் பாதுகாப்புக் குழுவினர் சந்திப்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 24 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

இலங்கை மனித உரிமை ஆணைக்குழவின் வடமாகாண ஆணையாளருக்கும் சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. பொலிஸ் தரப்பினரும் கலந்துகொண்ட இந்த சந்திப்பு யாழ் மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழவின் வடமாகாண ஆணையாளர் இ.ஆனந்தராஜா, யாழ் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிறிகுகனேசன், யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் கனகராஜ்  மற்றும் சிவில் பாதுகாப்பு பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

யாழ். மாவட்டத்தில் மனித உரிமைகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பாக இங்கு கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக சிறுவர், பெண்கள் ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கூடிய கவனமெடுக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

மனித உரிமை மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அதனை தடுப்பதற்கும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமென சிவில் பாதுகாப்புக் குழுவில் இருந்து 13பேர் அடங்கிய உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதில் 9 ஆண்களும் 4 பெண்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதின் முதலாவது அங்கமாக செயற்படுபவர்கள் பொலிஸார் என்பதைச் சுட்டிக்காட்டி, பொலிஸார் பொதுமக்களுடன் நெருங்கிய உறவைப் பேணுகின்ற போது நீதியை நிலைநாட்ட முடியும். அத்துடன் தமிழ் பிரதேசத்தில் கடமையாற்றும் பொலிஸார் தமிழ் புலமையை வளர்க்க வேண்டும் என்றும் இந்தச் சந்திபில் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X