2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

காணாமல்போனோர் குறித்த விசாரணை அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்: இ.ஆனந்தராஜா

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 24 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினால் 1996 ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கை இன்னும் விசாரணை அதிகாரிகளினால் மனித உரிமை ஆணைக்குழுவிடம் சமர்பிக்கப்படவில்லை.

அவ்வறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும்' என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் வடபிராந்திய ஆணையாளர் இ.ஆனந்தராஜா தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை யாழ் மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

1996 ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பாக வடக்கிலும் கிழக்கிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இரண்டு மாகாணங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கைகள் இன்னும் சமர்பிக்கப்படவில்லை. அவ்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அத்துடன் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை சமூகத்தில் புறக்கணிப்பது தொடர்பாக அல்லது அரச திணைக்களங்கள் மற்றும் வங்கிகளில் புறக்கணிப்பது தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டால் அவை தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X