2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சர்வதேச மர நடுகை தினம் யாழில் அனுஷ்டிப்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 27 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)

சர்வதேச மர நடுகை தினத்தை முன்னிட்டு யாழ் பொலிஸ் நிலையத்திற்கான புதிய கட்டிடத் தொகுதி வளாகத்தில் மர நடுகை வைபவம் இன்று நடைபெற்றது.

கொழும்பு லயன்ஸ் கழகமும் சடஹரிதா மர நடுகை திட்டமும் இணைந்து இன்று காலை 10 மணிக்கு மர நடுகை செயற்திட்டத்தை ஆரம்பித்தது. மர நடுகையினை யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா மர நடுகையினை ஆரம்பித்து வைத்தார்.

பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் செ.ஸ்ரீ.குகநேசன் மற்றும், யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா உட்பட கொழும்பு லயன்ஸ் கழக திட்டமிடல் இணைப்பாளர் பி.ரமேஷ் மற்றும் சடஹரிதா பிளான்ட்டேசன் நிறுவனத்தின் யாழ். மாவட்ட முகாமையாளர் ராம், பிளான்ட்டேசன் நிறுவனத்தின் சிரேஸ்ட விற்பனை முகவர் ஆர்.ராஜேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சர்வதேச மர நடுகை தினம் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றதென்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X