2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

இஸ்லாத்தை அவமதித்த திரைப்படத்திற்கு யாழ். மாநகர சபையில் கண்டனம்

Super User   / 2012 செப்டெம்பர் 27 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)

இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் அமெரிக்காவில் தயாரித்து வெளியிடப்பட்ட திரைப்படத்தை கண்டித்து யாழ். மாநகர சபையில் கண்டன பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது என பிரதி மேயர் சட்டத்தரணி ரமீஸ் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் இன்று வியாழக்கிழமை யாழ். மாநகர முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் மாநகர சபை உறுப்பினரான எம்.எம். முஸ்தபா இந்த கண்ட பிரேரணையை சபையில் முன்வைத்தார். இந்த பிரரேணை யாழ். மாநகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என பிரதி மேயர் ரமீஸ் குறிப்பிட்டார்.

இந்த கண்டன பிரேரணையின் பிரதி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0

  • Haniff Friday, 28 September 2012 01:03 PM

    இதுதான் இந்த இரு சமூககங்களின் இன்றைய தேவை. யாழ் மாநகர சபைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X