2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யாழ். மாவட்டம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது: அரச அதிபர்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 28 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ். மாவட்டம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருவதாக அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அரசங்கத்தினால் வடபகுதிக்கு ஏனைய மாகாணங்களிலும் பார்க்க பெருமளவான நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது. இதனால் யாழ் மாவட்டம் விவசாயம், மீன்பிடி, கைத்தொழில், கால்நடை வளர்ப்பு என அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்த முன்னேற்றம் தொடர்பான அறிக்கை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் சமர்பிக்கப்படவுள்ளது என்றார்.

அத்துடன் யாழ் மாவட்டம் கல்வித் தரத்தில் பாரிய பின்னடைவைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் பட்டதாரி மாணவர்களுக்கான நியமனம் வழங்கும் போது 3000ற்கு மேற்பட்டவர்கள் தெரிவு செய்யப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளனர். ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உயர்க் கல்வியை பெற்றிருக்கின்றார்கள்' என்று அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X