2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

பௌத்த அறநெறி பாடசாலை யாழில் அங்குரார்ப்பணம்

Super User   / 2012 செப்டெம்பர் 30 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


தமிழ் பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் இந்து பௌத்த அறவெறி பாடசாலை அங்குரார்ப்பாண நிகழ்வு இன்று ஞாயிற்றிக்கிழமை யாழ். நாக விகாரையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில பிரதம அதிதியாக யாழ். படைகளின் கட்டளை தளபதி மஹிந்த ஹத்தருசிங்க மற்றும் யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களிற்கான பதிவுகளையும் மேற்கொண்டனர்.

இன்ற ஆரம்பமான பௌத்த அறநெறி பாடசாலையில் முதற்கட்டமாக 50 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இப்பாடசாலையானது கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னர் வட பகுதியில் செயற்பட்டதாகவும் யுத்தம் காரணமாக அது செயலிழந்து போயுள்ளதால் மீண்டும் வடபகுதியில் இதனை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையின் முதற்கட்டமாக இன்று மேற்கொண்டுள்ளதாக தமிழ் பௌத்த சங்க செயலாளர் சு.கிருசானந் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X