2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யாழ். மாவட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 01 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


யாழ். அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் ஊக்குவிக்கப்படுமா என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம், அமெரிக்க புலம்பெயர் அகதிகளுக்கான பிராந்திய இணைப்பாளர் அமன்டா ஜக்கோப்சீன் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க புலம்பெயர் அகதிகளுக்கான இணைப்பாளர் அமன்டா ஜக்கோப்சீன் மற்றும் அவரது குழுவினருக்கும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையிலான சந்திப்பு  இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

இதன்போது யாழ். மாவட்டத்தில் எந்த வகையான வளங்கள் பாவனையில் உள்ளன? இந்த  வளங்களைக் கொண்டு மக்கள் கைத்தொழிலை அபிவிருத்தி செய்ய முனைகின்றார்களா? அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் அபிவிருத்தியினால் மக்கள் பயனடைவார்களா?  என அவர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்,

'அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் மேற்கொள்ளப்படும் உற்பத்திகளை ஏற்றுமதி செய்யவும் இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பை பெறுவதற்கும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. யாழ். மாவட்டத்தில் மீள்குடியேறிவர்கள் மற்றும் பல தரப்பினருக்கும் வீட்டுத் தேவை அதிகமாக காணப்படுகின்றன எனவும் கூறியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மீன்பிடி, விவசாயம், கைத்தொழில், மின்சாரம், வீதி அபிவிருத்தி மற்றும் உட்கட்டுமான அபிவிருத்திகள் தொடர்பாகவும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
மீள்குடியேற்றம் மற்றும் இந்திய வீட்டுத் திட்டங்கள் குறித்து பல்வேறு விதமாகவும் அமெரிக்க புலம்பெயர் அகதிகளின் இணைப்பாளர் ஆராய்ந்ததாகவும் அவர் கூறினார்.

இச்சந்திப்பில் அனர்த்த முகாமைத்துவ அலுவலர் லிஸா மன்ரில்லா, அமெரிக்கத் தூதரக அரசியல் அலுவலர் தோமஸ் ரட்கீ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X